ஆதரவற்ற குழந்தை இல்லங்கலுக்கு ரூ.6 கோடி மானியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

ஆதரவற்ற குழந்தை இல்லங்கலுக்கு ரூ.6 கோடி மானியம்.

தமிழகத்தில், தொண்டு நிறுவனங்களில் வசிக்கும், குழந்தைகளின் உணவு செலவுக்காக, சமூகநலத் துறை, இந்த ஆண்டு, 6.04 கோடியை, மானியமாக வழங்கி உள்ளது.ஐந்து முதல், 18 வயதிலான, 13,485 குழந்தைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும், 171 குழந்தை இல்லங்களில் வசித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டவர்களின் குழந்தைகள், நீண்ட நாட்கள், சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி பெற்றோரின் குழந்தைகள், இங்கு வசிக்கின்றனர்.இவற்றில், ஒவ்வொரு, 25 குழந்தைகளையும் பராமரிப்பதற்கு, ஒரு இல்லத்தாய் / இல்லத் தந்தை மற்றும் உதவியாளர் இருப்பர். ஒரு குழந்தைக்கு, அவர்களின் உணவு செலவுக்காக, ஒரு மாதத்திற்கு, 450 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இத்தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த நிதியாண்டுக்கான மானியமாக, 6.04 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி