8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை.

இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நிலைமை இருந்தால், அது மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் என்றும், கல்வியை கற்க கடின உழைப்பை மாணவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது. எனவே, இத்திட்டத்தை மத்திய அமைச்சரவை மீண்டு ஒரு முறை பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி