மே 9ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2013

மே 9ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு?

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வருக்கு பிடித்த எண், 9 என்பதாலும், அன்று, அமாவாசை என்பதாலும், அன்றயை தேதியில், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்புஇருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மே, 10ம் தேதியோ அல்லது அதை ஒட்டினாற்போலவோ, தேர்வு முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன."ஆன்-லைன்" விண்ணப்பமும் ஏற்பு: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், பொதுத் தேர்வு முடிவுவெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். "ஆன்-லைன்" வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி