ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி என்ன? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2013

ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி என்ன? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.

பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி.பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, தொழில்நுட்பக்கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெறுவது தொடர்பாக, சென்னை ஐகோர்ட், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், "எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற படிப்புகளுக்கு, பல்கலைக்கழகங்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்றாலும், பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், ஒப்புதல் பெற வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, தமிழகத்தைச் சேர்ந்த, சில தனியார் கல்லூரிகள், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள், பி.எஸ்.சவுகான், கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழு சட்டங்களின் படி, கல்லூரிகளுக்கு எந்தவிதமான தடை மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம், தொழில்நுட்பக் கவுன்சிலுக்கு இல்லை. வழி காட்டும் குறிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்ட ஆலோசனைகளைத் தான், பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கவுன்சில் வழங்க முடியும்.பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., பாடங்களுக்காக, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பக் கவுன்சில் விதிமுறைப்படி எம்.சி.ஏ., பாடம் தான், தொழில்நுட்பக் கல்வி வரம்பிற்குள் வருகிறது; எம்.சி.ஏ., இந்த வரம்பிற்குள் வரவில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி