மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2013

மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத்துறை மூலம் வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவி்த்தார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில்மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இக்கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்த விலையில்லா மடிக்கணினிவழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்று பேசியபோது,   ‘’ இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவரே தமிழக முதல்வர்தான். அதோடு, பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கும் குறைந்து கொண்டே வருகிறது.அதனால் நூலகத்துறையின் சார்பில் நூலகர் வாசகர் வட்டத்தை உருவாக்கி மாணவ, மாணவிகள் மத்தியிலும், பிறரிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, இங்கு வந்துள்ள நீங்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் நாள்தோறும் 50 பக்கங்களாவது படிப்போம் என்று உறுதியேற்றுக் கொள்வது அவசியம். ஏனென்றால், வருங்காலம் போட்டிகள் நிறைந்த உலகமாகவே இருக்கும். அதனால், மாணவர்களாகிய நீங்கள் சீரிய சிந்தனையோடு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அகிலந்திய அளவில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. அதனால், எந்த நோக்கத்திற்காக மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியை முதல்வர் வழங்கினாரோ, அந்த வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்’’ என அமைச்சர் தெரிவித்தார். அதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மொத்தம் 586 பேருக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி