கோடை விடுமுறையிலும் பணிக்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்விதுறை அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

கோடை விடுமுறையிலும் பணிக்கு வரவேண்டும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்விதுறை அதிரடி உத்தரவு.

கோடை விடுமுறையின் போது தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.முழு ஆண்டு தேர்வு முடிந்து அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்த பணிகளை விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியரும், ஒரு அலுவலக பணியாளரும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அலுவலக நிமித்தமாகவோ அல்லது மருத்துவ விடுப்பு எடுக்க நேரிட்டாலோ முதன்மை கல்வி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி ஆய்வின்போதும், தொலைபேசி அழைப்பின் போதும் தலைமை ஆசிரியரோ, அலுவலக பணியாளரோ இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த சுற்றறிக்கைஅனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி