பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு பணியாளர் சங்கதலைவர் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2013

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு பணியாளர் சங்கதலைவர் கோரிக்கை.

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 2006ம் ஆண்டு முதல், அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையை பெற்று, அனைத்து சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அறிக்கையை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலின்போது முதலில் அறிவித்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் வாங்கும் சம்பளத்தில்சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்றபின், பென்ஷன் பெற முடியாத அங்கன்வாடி பணியாளர்களுக்கு, உடனடியாக பென்ஷன் வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தி வழங்கியது போல தமிழக அரசும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், இந்த அகவிலைப்படி அடிப்படையில், ஊதியம் வழங்க வேண்டும். மேலும், நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி