ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு.

தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 வகுப்புகள் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர்,தையல் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5,000 வழங்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு குழுவால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஒரு பள்ளியில் தினசரி மூன்று மணி நேரம் பணிபுரிய வேண்டும்.வாரம் ஒன்றுக்கு மொத்தம் 9 மணி நேரம் பணி நேரமாகும். பணி நாடுநர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, அப்பதிவு தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் சாதிச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல் ஆகியவற்றை அனுப்ப வேண்டும். 137 பணியிடங்கள்: உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 49 இடங்களும், ஓவிய ஆசிரியர் பணிக்கு 52 இடங்களும், இசை, தையல், கணினி, தோட்டக்கலை, வாழ்க்கைத் திறன், தகவல் தொடர்புத் திறன், கட்டுமான ஆசிரியர் பணிகளுக்கு 36 இடங்களும் உளளன.விண்ணப்பங்களை சுய விலாசமிட்ட ரூ. 5 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையுடன் ஒப்படைத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ஆம் தேதி கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி