கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2013

கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், ஆர்.சி.பள்ளி பல சமய உரையாடல் மன்ற அரங்கத்தில் நேற்றுநடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ப்ளஸ் 2 விடைத்தாள்திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். விடைத்தாள் திருத்த தனி கட்டடம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.மேல்நிலைக் கல்வியில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு மதிப்பெண் முறையை அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரை மையமாக கொண்டு, புதியகல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அலகு விட்டு அலகு பணி இடமாறுதலுக்கு வழிவகை செய்ய வேண்டும்.கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்டஅனைத்து உயர்கல்வியிலும் 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி