ஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா...? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

ஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா...?

ஆசிரியர் வருவாரா... பாடம் சொல்லித் தருவாரா..." என்ற ஏக்கத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், பூட்டிய பள்ளி வாசலில் காத்திருந்தனர்.தேனி மாவட்டம், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறனர். இவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், பள்ளிக்கு செல்கின்றனர். மற்ற நாட்களில், பள்ளி பூட்டப்பட்டு இருப்பதால் ஏமாற்றத்துடன், மாணவர்கள் வீடு திரும்புகின்றனர்.இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 25 மாணவர்கள் படித்து வந்தனர்; இந்த ஆண்டு ஆசிரியர்கள் சரியாக வராததால், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்திராநகர் போன்ற மலைக் கிராமங்களில், மற்ற பள்ளிகளிலும், இதே போன்று, மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:சின்னவனம்:இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பள்ளிக்கு வருவர்; அப்படியே, வந்தாலும் காலை 11:00 மணிக்கு வந்து பிற்பகல், 2:00 மணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.சன்னாசி:கடந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது, பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. இது சம்பந்தமாக, கிராம பொதுமக்கள் சார்பில் தலைமை ஆசிரியர் கண்ணனிடம் முறையிட்டோம். அதற்கு அவர், உங்கள் குழந்தைகளின், டி.சி-யை வாங்கி கொண்டு வேறு பள்ளில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி: கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, தினமும் ஆசிரியர்கள் பள்ளி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி