பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2013

பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை.

்சிவகங்கையில், வேலைவாய்ப்பு சந்தை நடத்தி, இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்த, வேலைவாய்ப்பு அலுவலரை, கண்டித்து, பட்டதாரிகள் முற்றுகையிட்டனர்.வேலைவாய்ப்புத் துறை இயக்குனரக உத்தரவுபடி, வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், ஏப்.,22ல் சிவகங்கையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கும் பொருட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த கம்பெனிகள் பங்கேற்று, தங்கள் அலுவலகங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்வர் என அறிவிக்கப்பட்டது.நேற்று வேலைவாய்ப்பு சந்தை நடக்கும் பள்ளியில், 10ம் வகுப்பு முதல் பட்டம் பெற்று வேலை இல்லாத இளைஞர்கள், பெண்கள் கல்வி சான்றுகளுடன் வந்திருந்தனர். ஆனால், அறிவித்தபடி, அங்கு நேர்காணல் நடைபெறவில்லை.காலை 12 மணி வரை காத்திருந்தும், எந்த கம்பெனிகளில் இருந்தும்நேர்காணல் நடத்தவில்லை.அதிருப்தியான பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரனிடம், "நீங்கள் அறிவித்தபடி நேர்காணல் நடத்தாதது ஏன்? நாங்கள் வெளியூர்களில் இருந்து வந்து, காத்திருந்தும் ஏமாற்றம் அடைகிறோம்," எனக்கூறி கூச்சலிட்டனர்.அவர்களிடம், கல்வி சான்று நகல், விண்ணப்பம், மொபைல் எண்களை பெற்றுக்கொண்டு, கூடிய விரைவில், நேர்காணல் நடத்தப்படும். அதற்கு அழைப்பு விடுகிறோம் என தெரிவித்து அனுப்பினார். இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் கூறுகையில்,"வேலைவாய்ப்புத்துறை இயக்குனர், வேலைவாய்ப்பு சந்தையை நடத்த எங்களுக்கு உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள கம்பெனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான்கு நாள் நான் சென்னை சென்று விட்டேன். எந்த கம்பெனிகளும் "வேலைவாய்ப்பு சந்தைக்கு" வரவில்லை. இதனால், நடத்தவில்லை," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி