தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2013

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...!

கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப்பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.அதனால் இவற்றைத் தலைமையாசிரியரோ பிற ஆசிரியர்கள் சேர்ந்தோ தமது பொறுப்பில் வைத்திருந்து விட்டு கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மறுதிறப்பு நாளன்று மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்துகொள்ளவும். ஏற்கனவே ஒருசில பள்ளிகளில் கோடை விடுமுறையில் மடிக்கணினி களவு போனதும் அப்பள்ளித் தலைமையாசிரியர் பணிநிறைவு பெற்ற பின்னரும் அப்பிரச்சினை அவருக்குத் தீராத தலைவலியாக இருந்ததும் நாளிதழில் வெளியானதாக நாம் அறிந்துள்ளோம்! ஆகவே பள்ளியின் முக்கியத் தளவாடங்களையும் உபகரணங்களையும் பாதுகாப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி