சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2013

சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு.

சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடிவருகின்றனர்.இந்நிலையில், சென்னை, சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சத்துணவுக்கு, ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்புடன் சாதம் வழங்கும் நாளில் ஒரு மாணவனுக்கு ரூ.1.30 எனவும், பலவகைசாதம் வழங்கும் நாட்களில் ஒரு மாணவனுக்கு ரூ.1.70 காசுகள் எனவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவனுக்கு பருப்புடன் சாதம் வழங்கும் நாளில், ஒரு மாணவனுக்கு ரூ.1.40 ஆகவும், பல வகை சாதம் வழங்கும் நாட்களில், ரூ.1.80 காசுகள் ஆகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காய்கறி, மளிகை, விறகு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அரசு மானியத்தொகையை உயர்த்தியுள்ளது. எனினும், அரசு உயர்த்திய இத்தொகை போதுமானதல்ல என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு மாணவனுக்கு நான்கு ரூபாய் ஒதுக்கினால்தான், சிரமமில்லாமல் சத்துணவு வழங்க முடியும் என இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி