சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2013

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதி வர வாய்ப்பு.

சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவு 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவு 28–ந்தேதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. சார்பில் இந்தியாமுழுவதும் 12–வது வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 17–ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 13 நாட்கள் ஆகிவிட்டன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் மார்க் தெரியாமல் எந்த படிப்பிற்கு செல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போது தேர்வு முடிவு வரும் என்று தினமும் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12–வது வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 26–ந்தேதியும், சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு முடிவுகள் மே 28–ந்தேதியும் வரவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி