ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2013

ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம்.

ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3 மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில்ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2099ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் சேர தமிழகத்தில் தகுதி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, முதல் முறையாக 22 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமேதேர்ச்சிப் பெற்றனர். இதையடுத்து, அக்டோபர் மாதம் 14ம் தேதி மீண்டும் தகுதித் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கு விண்ணப்பித்திருந்த 88 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றனர்.  6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை.இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது, ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.இந்த ஆண்டு தகுதித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இந்த ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு கிட்டத்தட்ட மூன்று மாத அவகாசம் இருக்கிறது. இதையடுத்து தகுதித் தேர்வை சந்திக்க இப்போதே பலர் ஆயத்தமாகி வருகின்றனர். தகுதித் தேர்வு மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களும் களம் இறங்கி உள்ளன.

2 comments:

  1. Pothuvaga entha oru notificaation websitla poduvanga athukkuappuram paperla poduvanga.anaal eppo paperla podranga websitla podamatranga.ethukku yen thaniya oru trb website.

    ReplyDelete
  2. Sir, Please clarify B.Sc(CS),B.Ed candidates are also eligible to write TET exam? and what about those(B.Sc.(CS),B.Ed) had already passed TET exam? will they get posting this year?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி