பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89% - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%

இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.இவர்களில், ஒட்டுமொத்த அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர். அதன் தேர்ச்சி விகிதம் 89%.மாணவர்களில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86%.மாணவிகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 965 பேர் தேர்ச்சி பெற்று, 92% தேர்ச்சி விகிதம் பெற்றனர்.இவற்றில் 60%க்கும் மேலாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர்.கடந்தாண்டு நிலவரம்கடந்தாண்டு(2012) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 86.20% அளவே தேர்ச்சி விகிதம் இருந்தது.அவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.40% என்ற அளவிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.90% என்ற அளவிலும் இருந்தது. தேர்வெழுதியோரில், 60%க்கும் அதிகமானமதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 815 பேர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி