நாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2013

நாடு முழுவதும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 7.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் 30 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலை தேர்வை எழுத உள்ளனர். மத்திய அரசு பணியா ளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டு தோறும்நடத்தி வருகிறது.முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்க்காணல் தேர்வு என 3 கட்ட தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் 5ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. ஆன், லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்தது. நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் விண் ணப்பித்துள்ளனர்.இந் நிலையில், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 45 முக்கிய நகரங்களில் 2,500க்கும் மேற்பட்ட மையங்களிலும், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் 96 மையத்திலும் இன்று நடைபெறுகிறது. யுபிஎஸ்சி வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காலி பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ்தேர்வை நடத்து கிறது. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக யுபிஎஸ்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வுடன், ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணி தேர்வையும் நடத்துகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி