தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2013

தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்.

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரைகாமராஜ் பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம்ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் நடந்த ஆசிரியர் பணி நியமனங்கள் குறித்த தகவல்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தில், பேராசிரியர் இஸ்மாயில் விண்ணப்பித்திருந்தார். பணி நியமன முறைகேடு குறித்து, மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தார்.விசாரணையில், அவருக்கு தகவலோ ஆவணங்களோ பல்கலை தரவில்லை. ஆவணங்கள் தராததை கண்டித்து, மாநில தகவல் ஆணையம், பல்கலைகழகத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்துள்ளது. பத்து நாட்களுக்குள், உரிய ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.இந்த தொகையை, பல்கலைக்கழக பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து பிடித்தம் செய்து, உரிய அரசு கணக்கில் செலுத்தி, அந்த விவரத்தை, பல்கலை பதிவாளர், ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி