முதுகலை ஆசிரியர், இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2013

முதுகலை ஆசிரியர், இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்தாய்வு.

பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196 பேர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் 310 பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி), "ஆன்-லைன்" மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.கடந்த டிசம்பரில், 2,300க்கும் அதிகமான, முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில், தாவரவியல் ஆசிரியர் மட்டும், வழக்கு காரணமாக, பணி நியமனம் செய்யப்படவில்லை. சென்னை, ஐகோர்ட்  உத்தரவுப்படி, மீண்டும் ஒருமுறை, அனைவருடைய சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி, தேர்வு செய்யப்பட்ட, 196, முதுகலை தாவரவியல் ஆசிரியர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும், "ஆன்-லைன்" வழியில் நடக்கிறது.இதேபோல் டி.என்.பி.எஸ்.சி., மூலம், கல்வித்துறைக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட, 310, இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வும், நாளை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. சம்பந்தபட்டவர்கள், நாளை காலை, 9:00 மணிக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு சென்று, கலந்தாய்வில் கலந்துகொண்டு, பணி நியமன உத்தரவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அனுப்பிய தேர்வுக் கடிதத்தை, கலந்தாய்வுக்கு எடுத்துச் செல்லவேண்டும் எனவும், இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி