10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2013

10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்.

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால், உருவாக்கப்பட்ட, 10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், 100ம் பக்கத்தில், "இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு" என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. 105ம் பக்கத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்த தகவலில், காமராஜர், விருதுநகருக்கு அருகில் உள்ள, விருதுபட்டி கிராமத்தில் பிறந்ததாக வெளியாகியுள்ளது.இதுகுறித்து, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: விருதுநகரில் தான் காமராஜர் பிறந்தார்; விருதுபட்டி தான் விருதுநகராக மாறியது. 10ம் வகுப்பு பாடத்தில், விருதுநகர் அருகே, விருதுபட்டி என, குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இது, மாணவர்களை குழப்புவதாக உள்ளது.விருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிறந்தார் என்பது தான் சரி. ஊர் பெயர் தவறாக இடம் பெற்றதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி