குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் மூடல்: 350 குழந்தைகள் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2013

குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் மூடல்: 350 குழந்தைகள் பாதிப்பு.

மலைப்பகுதியில் உள்ள, ஒன்பது குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் மூடப்பட்டதால், அங்கு படித்த, 350 குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்தி, பர்கூர், அந்தியூர் மலைப்பகுதியில், அரசுபள்ளிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் உள்ளன. பிற மலைப்பகுதி குழந்தைகளின் கல்விக்காக, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில்,சுடர் தொண்டு நிறுவனம் மூலம், 11 மையங்களில், எட்டு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளை நடத்துகின்றனர்.இப்பள்ளிகள் இரண்டு ஆண்டுக்கு மேல், ஒரு இடத்தில் செயல்படக்கூடாது என்றும், அங்கு படிப்போரை, அருகில் உள்ள முறைசார் பள்ளியில் சேர்க்க வேண்டுமெனவும், தொழிலாளர் நல ஆணையர்உத்தரவிட்டுள்ளார்.இம்மலை கிராமங்களில், தற்போது செயல்படும் பள்ளிகள் மற்றும் வாழ்விடங்களுக்கு, அரசின் முறைசார் பள்ளிகள் வெகு தொலைவு உள்ளன.குறைந்த பட்சம், 3 முதல், 8 கி.மீ., தூரம், அடர்ந்த காடு மற்றும் யானைகள் நடமாடும் காட்டு வழியாகும்.இந்நிலையில், ஒன்பது பள்ளிகளும், ஜூன், 1ம் தேதியுடன் மூடப்பட்டன. அக்குழந்தைகளை, வெகு தூரத்துக்கு அனுப்பி, அரசு துவக்கப்பள்ளியில் படிக்க வைக்கும் மனநிலையில், மலைக்கிராம மக்கள் இல்லை. அத்துடன், அரசு துவக்கப்பள்ளி செல்லும் பாதை, கொடிய விலங்குகள் உள்ள பாதை என்பதால், மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் குழந்தைகள் படித்த அதே இடங்களில், தொண்டு நிறுவன பள்ளியை நிறுவி, கல்வி தொடரச் செய்ய வேண்டும் அல்லது அதே இடத்தில் அரசு துவக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.அரசு துவக்கப்பள்ளி துவங்கினாலும், அரசு ஆசிரியர்கள் இங்கு தினமும் வரவும், தங்கி இருக்கவும் விரும்பாமல், ஓரிரு நாளில் விடுப்பில் அல்லது மாற்றல் கேட்டு சென்று விடுகின்றனர். இப்பிரச்னை குறித்து, ஈரோடு கலெக்டர், சி.இ.ஓ., போன்றோரிடம் முறையிட்டோம்; தகுந்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், இங்கு அரசு பள்ளி துவங்க, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி உள்ளோம்; அரசின் உத்தரவுக்காக, காத்துள்ளோம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி