6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2013

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி.

டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது;கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.அரசு பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, மூன்றாவது முறையாக, வரும் ஆக., 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு (ஆசிரியர் தகுதித் தேர்வு)நடக்கிறது. இதற்கு, கடந்த, 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.கடந்த வாரம் வரை, 6 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களும், வந்தபடி உள்ளன. 7 லட்சம் முதல், 7.5 லட்சம் பேர் வரை, தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வு, ஆக., 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வு, 18ம் தேதியும் நடக்கின்றன.இரு தேர்வுகளையும், 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில்நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. கடந்த தேர்வு, 1,072 மையங்களில் நடந்தது. இந்த எண்ணிக்கைக்கு குறையாமல், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர், தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய ஆசிரியர் அனைவரும், அக்டோபருக்குள், பணி நியமனம் செய்யப்படுவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி