ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2013

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது.

நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது. பள்ளிக் கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் சங்கத்திற்கு மூவர் வீதம் அழைக்கப்பட்டனர்.பின்னர் உயர்நிலைப்பள்ளி சார்ந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.இதில் தொடக்கக்கல்வியோடு இனணந்து பணியாற்றும் சாஸ்திரா பட்டதாரி ஆசிரியர் கூட்டணி,பட்டத◌ாரி ஆசிரியர் சங்கம்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டன.பின்னர் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்டனபின்னர் கல்வித்துறை அமைச்சுபணியாளர் அனைத்து சங்க பிரதிநிதிகள், உ.தொ.க.அ. சங்க பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசணை நடத்தப்பட்டது.வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில(அனைத்தும் சங்கங்களின் கருத்து தொகுப்பாக) முழுமையான விபரங்கள் இல்லை.
1.இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 ஆக உயர்த்துக
2.சி.பி.எஸ் முறையை கைவிடுக
3.Dual degree -க்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது
4.1-5,6-10,6-12 என்கிற முறையில் வகுப்புகள் கொண்ட பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்
( உயர்,மேல்நிலைப்பள்ளி சங்கங்கள்)
5.அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக்காவலர் நியமனம் செய்க
6.அலகுவிட்டு அலகு  மாறுதல் தருக
இவற்றில் ஒரு சில கோரிக்கைகள் தவிர மற்றவை திருப்தி அளிக்கவில்லை. ஆசிரியர் இயக்கங்கள் பங்காளிச் சண்டை போட்டுக்கொண்டு நான் பெரியவனா? நீ பெரியவனா? என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன. ஆசிரியர் நலனில் முழுமையாக அக்கறை காட்டுவதில்லை. சிங்கமும் எருதுகளும் கதை மாணவர்களுக்கு மட்டுமே. அதைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு கிடையாது. தயவு செய்து அனைத்து ஆசிரியர்களும் தங்கள் இயக்கத் தலைவர்களை சந்தித்து ஒன்றுவட்டு செயல்பட வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி