மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைப்பு: மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2013

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைப்பு: மீண்டும் வழங்க ஐகோர்ட் உத்தரவு.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்ட மதிப்பெண்ணிற்கு பதிலாக, 2 கேள்விகளுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.முதுகுளத்தூர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: எனது உறவினர் சித்தார்த் மனோஜ். பிளஸ் 2 வில் 1170 மதிப்பெண் பெற்றார். உயிரியல் மதிப்பெண் 196. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தார். உயிரியல் கேள்வி 24, 25 க்குதலா 3 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தலா 2 மதிப்பெண்தான் வழங்கியுள்ளனர்.மறுமதிப்பீடு கோரி, அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தார். ஆனால், முதலில் பெற்ற 196 க்கு பதிலாக, 195 ஆக குறைத்து மதிப்பெண் வழங்கினர். கேள்வி 24, 25க்கு கூடுதலாக தலா 1 மதிப்பெண் வீதம் 2 (198) மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்.இதனால், மருத்துவ படிப்பிற்கான "கட்-ஆப்" மதிப்பெண் சித்தார்த் மனோஜிற்கு 197.25 லிருந்து 197.75 ஆகஉயரும். அவரது பெயரை தரவரிசை பட்டியலில் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். அரச வக்கீல், "மாணவருக்கு மறுமதிப்பீடு செய்து, 198 மதிப்பெண் வழங்கப்படும்,&'&' என்றார்.நீதிபதி, "அரசு வக்கீல் உறுதியளித்தபடி, மாணவருக்கு 198 மதிப்பெண் வழங்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளர், மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில்மாற்றம் செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும். கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி