ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில்“கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு‘‘ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2013

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில்“கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு‘‘

‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில்ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.பட்டதாரி ஆசிரியர்தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராவணன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:– வருகிற 30.6.2013 அன்று நான்,ஓய்வு பெற உள்ளேன். கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்என்று விதி உள்ளது. அதன்படி, இந்த கல்வி ஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற என்னை அனுமதிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் கேட்டார். ஆனால், ஒப்புதல் கோரிய மனு மீது முதன்மை கல்வி அதிகாரி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, உரிய உத்தரவு பிறப்பிக்க முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.நடவடிக்கை மேற்கொள்வது இல்லைஇந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், “தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் மட்டுமே இதுபோன்ற பிரச்சினை இருக்கிறது. அரசின் விதி இருக்கும் போது அதை செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது இல்லை. இதுபோன்ற ஒரு வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது“ என்றார்.அனுமதி மறுக்கக்கூடாதுமனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:– ‘‘மனுதாரர் மீது குற்றச்சாட்டு எதுவும் இல்லை. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை, கல்வி அதிகாரிக்கு தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார். குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதி மறுக்கக்கூடாது. எனவே, மனுதாரர் இந்த கல்வி ஆண்டின்(2013–2014) இறுதி வரை பணியாற்ற தஞ்சாவூர்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்க வேண்டும்.’’ இவ்வாறுஉத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி