பொறியியல் கல்லூரிகள் தேர்ச்சி விவரம்.... மாணவர்கள் ஏமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2013

பொறியியல் கல்லூரிகள் தேர்ச்சி விவரம்.... மாணவர்கள் ஏமாற்றம்.

சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் வெளியிட்டது. தர வரிசைப்படி, கல்லூரிகளின் பட்டியலை வெளியிடாமல், ஒவ்வொரு கல்லூரியைப் பற்றியும், தனித்தனியே, மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள் மத்தியில், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பொறியியல் கல்லூரி சேர்க்கையின், முக்கிய நிகழ்வாக, பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்கி, ஜூலை, 31 வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு,கல்லூரிகளின் தரம் குறித்த தகவல் தெரியாத நிலையை சட்டிக்காட்டி,கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடக் கோரி, திருப்பூரைச் சேர்ந்த, பூபாலசாமி என்பவர், சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, 550 பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம் ஆண்டு, தேர்ச்சி சதவீத புள்ளி விவர பட்டியலை,www.annauniv.eduஎன்ற இணையதளத்தில், அண்ணா பல்கலை, நேற்று வெளியிட்டது.அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரியில் துவங்கி, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அகர வரிசைப்படியும் இல்லாமல், தர வரிசைப்படியும் இல்லாமல், அனைத்து கல்லூரிகளின் பட்டியலும் கலந்து வெளியிடப்பட்டுள்ளன.அதுவும், ஒவ்வொரு கல்லூரியையும், "கிளிக்" செய்தால், அந்த கல்லூரியின் தேர்ச்சி சதவீத விவரங்களை அறியும் வகையில், புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஒரு கல்லூரியில், எத்தனை பாடப் பிரிவுகள் உள்ளனவோ, அவை ஒவ்வொன்றிலும், தேர்ச்சி சதவீத விவரங்கள் தரப்பட்டுள்ளன.நேரடியாக, கல்லூரிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், "ரேங்க்" வாரியாக, கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டிருந்தால், ஒவ்வொரு கல்லூரியும், எந்த இடத்தில் உள்ளன என்பதை, உடனடியாக, மாணவர்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், தற்போதைய பட்டியல்படி, அப்படி தெரிந்துகொள்ள முடியாது என்பதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மேலும், கல்லூரியின், ஒரு ஆண்டு செயல்பாடுகளை வைத்து, ஒரு முடிவுக்கு வர முடியாது. குறைந்தது, நான்கு ஆண்டுகளின் புள்ளி விவரங்களை வெளியிட்டால் தான், மாணவர்கள், ஒரு முடிவுக்கு வர முடியும்.மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து கல்லூரிகளின், நான்கு ஆண்டு கால தேர்ச்சி விவரங்களை, தர வரிசையில், அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்பது, மாணவர், பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி