அரசின் இலவச புத்தக பை: மாணவர்கள் தயக்கம். தினமலர்செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2013

அரசின் இலவச புத்தக பை: மாணவர்கள் தயக்கம். தினமலர்செய்தி

தமிழக அரசு வழங்கும் இலவச புத்தகப் பையை பள்ளிக்கு எடுத்துச் செல்ல, மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளி மாணவர்களுக்குக்காலணிகள், புத்தகப் பை (பேக்), லேப்-டாப் வழங்கப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். பள்ளிகள் துவக்க நாளன்று இலவச சீருடை, காலணிகள், நோட்டு, புத்தகம் மற்றும் பேக் வழங்க முதல்வர் உத்தரவிட்டதால்,ஜூன் 10ம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு, "ஸ்மால் சைஸ்', 4 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, "மீடியம் சைஸ்', 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, "லார்ஜ் சைஸ்', பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பெரிய, "பேக்' வழங்கப்படுகிறது.

தயக்கம்:
அரசு சார்பில் வழங்கும் இலவச புத்தகப் பையில், தமிழக அரசின் சின்னம், முதல்வர் ஜெ., உருவம் அச்சிடப்பட்டுள்ளது. இதை பெற்றுச்செல்லும் மாணவர்கள், அந்த, "பேக்கை' பயன்படுத்தாமல்,கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அரசு சின்னம் மற்றும் முதல்வர் ஜெ., உருவம் அச்சிட்டுள்ள புத்தகப் பையை எடுத்துச் சென்றால், இலவச பொருளை பயன்படுத்துவதாகக் கூறுவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் உள்ளது.மேலும், இந்த பேக்குகளில், ஒரு "ஜிப்' மட்டுமே உள்ளது. வெளியில் பேக் வாங்கினால் இரண்டு அல்லது மூன்று ஜிப்கள் இருக்கும். புத்தகங்களை தனித்தனியாக வைத்துக் கொள்ள முடியும். இதனால், இலவச பையை பயன்படுத்த மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.சிலமாணவர்கள், இலவச பேக்கில் உள்ள அரசு சின்னம் மற்றும் முதல்வர் ஜெ., உருவத்தை அழித்து விட்டு பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி