பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2013

பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்.

அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.பழநியிலுள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில், பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பயின்று, பி.எட்., பட்டம் பெற்ற மாணவர்கள், 2012 அக்டோபரில் நடந்த ஆசிரியர்தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, இந்தபடிப்பு பி.ஏ., வரலாறுக்கு இணையானது அல்ல; அதற்குரிய அரசாணை இல்லை, எனக் கூறி, ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனம் வழங்க மறுத்து விட்டது.பாதிக்கப்பட்ட மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "அரசாணை வழங்கக்கோரி, மதுரை காமராஜ் பல்கலை, பதிவாளர் மூலம் உயர்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு 6 மாதமாகிறது. மேலும் தகவலறிய, சென்னை உயர்கல்வி அலுவலகத்திற்கு செல்லுங்கள், அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்" எனக் கூறி, கைவிட்டுவிட்டது.தற்போது ஆசிரியர் தகுதிதேர்வு ஆக., 18 ல் நடைபெறவுள்ளது. பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டத்திற்கு அரசாணை இல்லாததால், தேர்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மாணவர் பேச்சிமுத்து கூறுகையில், "பி.ஏ.,வரலாறு (வோக்கேஷனல்)பட்டத்திற்கு அரசாணை இல்லை, என பணி நியமனம் வழங்க மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகத்தை கேட்டால், சென்னை சென்றுகேட்க சொல்கிறார்கள்.நாங்கள் கிராமப்புற ஏழை மாணவர்கள். சென்னைக்கு செல்லவோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியாத நிலையில் உள்ளோம். தமிழக முதல்வர் அரசாணை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என்றார்.கல்லூரி முதல்வர் பிரபாகர் கூறுகையில், "பி.ஏ.,வரலாறு (வோக்கேஷனல்), அரசாணை வழங்கக்கோரி, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மூலம், உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி