குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2013

குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு.

அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்தி,கூடுதலாக, 1.37 லட்சம் பேர் குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரித் தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர் ஆகிய பணிகளில், காலியாக உள்ள, 5,566 பணியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த, 15ம் தேதி, மாலை, 4:00 மணி நிலவரப்படி, 16.13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அன்றிரவு, 11:59 வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 17.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.தேர்வாணைய, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா கூறுகையில்,"தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள், தினமும், கலெக்டர்களுடன் பேசுகிறோம்; அவர்களும் பேசுகின்றனர். தேர்வு நெருக்கத்தின் போது, "வீடியோ கான்பரன்சிங்" மூலமும் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்வோம்" என்றார். தேர்வுக்கு, இன்னும், 24 நாட்கள் தான் உள்ளன .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி