விடுதி மாணவர்களின் உணவு தயாரிக்க 645 கிரைண்டர்கள் கொள்முதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2013

விடுதி மாணவர்களின் உணவு தயாரிக்க 645 கிரைண்டர்கள் கொள்முதல்.

இந்த நிதியாண்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கு, மேலும், 645 கிரைண்டர்கள் கொள்முதல் செய்ய, பிற்படுத்தப்பட்ட நலத்துறை முடிவு செய்துள்ளது.பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ், 710 விடுதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை கீழ், 572 விடுதி; சிறுபான்மை நலத் துறை கீழ், 12 விடுதிகள் செயல்படுகின்றன.இவ்விடுதிகளில், 80,064 மாணவர் தங்கியுள்ளனர். மாணவர்களின் உணவு தயாரிப்புக்கு பல விடுதிகளில், கிரைண்டர் இல்லாமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, அனைத்து விடுதிகளுக்கும் கிரைண்டர் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைமுடிவு செய்தது.அதன்படி, 1,000 விடுதிகளுக்கு, கிரைண்டர் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 645 விடுதிகளுக்கு, கிரைண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பிற்படுத்தப்பட்ட நலத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பல விடுதிகளில், கிரைண்டர்கள் இருந்த போதும், அடிக்கடி பிரச்னைஏற்படுகிறது. இதனால், பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 645 கிரைண்டர்களை, கொள்முதல் செய்ய, நலத்துறை முடிவு செய்து உள்ளது. அதற்கான ஒப்பந்தப்புள்ளி, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இம்மாத இறுதிக்குள், ஒப்பந்தப்புள்ளி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி