சமையலர்களுக்கு புதிய பயிற்சி: ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு விடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

சமையலர்களுக்கு புதிய பயிற்சி: ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு விடிவு.

தமிழகத்தில் உள்ள, அனைத்து விடுதி சமையலர்களுக்கும், அந்தந்த நலத்துறை நிர்வாகம், புதிய பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்பட்டது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,300 விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 உண்டு உறைவிட பள்ளிகள்; பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இந்த விடுகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி உள்ளனர்.இவர்களுக்கு மூன்று வேளை உணவும், சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில், உணவில், இனிப்பு வகைகளும் அளிக்கப்படுகிறது.இந்நிலையில், பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்தனர்; அதே போல், தமிழகத்தில் விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள, விடுதி சமையலர்களுக்கு, புதிய பயிற்சி அளிக்க, நலத்துறைகள் திட்டமிட்டுஉள்ளன.இப்பயிற்சியில், சுகாதாரமான முறையில் உணவைச் சமைப்பது, அவற்றை முறையாகப் பாதுகாப்பது, ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களிடம் எவ்வாறு மனிதநேயத்துடன் பழக வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படும் என, தெரிகிறது.இப்பயிற்சிகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு, ஓரளவு அமல்படுத்தப்பட்டால் கூட, மாணவர்களுக்குச் சுகாதார சீர்கேடு பாதிப்புக் குறையும் வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி