இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டை !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2013

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டை !!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடை முறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒருநபர் குழு அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட்டுள்ளது. 6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் ஆசிரியர்களுக்கு குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில்
¤ இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடும்  இல்லை.
¤ தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.
¤ மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
     இதுவே ஊதியக்குழுவின் பரிந்துறையில் அரசால் கல்வித்துறைக்கு கிடைத்தது.இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை அது நமது உழைப்புக்கு கிடைக்க வேண்டியது ,நமது பணம் .
     அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுத்தது போன்றே மத்திய அரசுக்கு இணையான ஊதியம்தான் கேட்கிறார்கள் .ஆனால் அரசு இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியனாகக்கூட பார்க்கவில்லை என்பது மிகவும் கவலைப்பட வேண்டியது.
அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களின் உரிமைகளைப் பெற முடியும்...!
                ¤ கல்விச்செய்தி ¤

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி