ஊதிய உயர்வில் புறக்கணிப்பு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

ஊதிய உயர்வில் புறக்கணிப்பு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்.

அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் ஊதியக்குழு பரிந்துரையின்அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில்இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என கூறப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என தொடர்ந்துவலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளஅறிவிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். காளையார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர்ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ்அமலநாதன் ஆகியோர் கூறுகையில், ‘கடந்த 2009ம் ஆண்டிலிருந்து ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என போராடி வருகிறோம்.2010ல் ஒரு நபர் குழு பரிந்துரையிலும் இடைநிலை ஆசிரியர்புறக்கணிக்கப்பட்டனர். 2011 தேர்தல் வாக்குறுதிப்படி அமைக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள மூன்று நபர் குழு பரிந்துரையிலும் 60ஆயிரம் இடைநிலை ஆசிரியர் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்றனர்.காரைக்குடி: இடைநிலை ஆசிரியர் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிராகரித்த மூவர் குழுவை கண்டித்து, காரை க்குடிஉதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் குமார், நகர கிளை அமைப்பாளர் சாவித்திரி, முன்னாள் மாவட்ட தலைவர் காத்தமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் சம்பள உயர்வு, பங்கேற்பு ஓய்வூதியம் மற்றும் இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணி நியமன ஆணை திருத்தம் ஆகியவற்றை நிராகரித்த மூவர் குழுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி