தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டட வசதியில்லை: தலைமையாசிரியர்கள் புகார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டட வசதியில்லை: தலைமையாசிரியர்கள் புகார்.

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அங்கு கட்டட வசதிகள் இல்லாமல் உள்ளது என தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாவிலுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் நடந்தது.ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசுகையில், "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகைப் பதிவு செய்து விட்டு, தங்கள் சொந்த வேலைகளை கவனிக்கின்றனர். எனது தலைமையில் 4 தலைமை ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தாமதமாக பள்ளிக்கு வருவதும், பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இனி தவறுகள் நேர்ந்தால் கண்காணிப்புக்குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் பேசும் போது, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 40 பள்ளிகளில், போதிய கட்டட வசதிஇல்லை.அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பரவலாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. நியாய விலைக்கடை மற்றும் டாஸ்மாக்கிற்கு நேரடியாக லாரிகள் மூலம் பொருட்களை அனுப்புவது போன்று இலவச கல்விஉபகரணங்களையும் அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி