பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு.

பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள,அரசு மற்றும் உதவி பெறும், பள்ளிகளில், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், நலிவடைந்த பிரிவினர் உட்பட 20 உறுப்பினர் கொண்ட பள்ளி மேலாண்மை நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாதந்தோறும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, அறிக்கையை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு அனுப்பவேண்டும்.பல பள்ளிகளில், இந்த கூட்டம் நடத்தப்படாமல், நடத்தியதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, கல்வித்துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அது குறித்த அறிக்கையை, வட்டார வளமையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.கூட்டம்நடத்தவில்லை,எனில் அது குறித்த தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கூட்டம் நடந்தது குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி,மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாதத்தின் முதல் 5ம் தேதிக்குள், அந்தஅறிக்கையை, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி