முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி.

தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு சார்பில், முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், எளிமையான முறையில், முழு ஈடுபாட்டுடன் அறிவியல் பாடங்களை கற்றுக் கொள்ள, தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதன்படி, வேதியியல், இயற்பியல் முதுநிலைப் பட்டதாரி ஆசியர்களுக்கு, "அறிவியல் கற்பித்தலில் புதிய முறைகள்" எனும் தலைப்பில், இரு நாள் பயிற்சி வகுப்பு, இன்று துவங்கி (26ம் தேதி), நாளை வரை நடக்கிறது.ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து, பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, காந்தி மண்டப சாலை, அறிவியல் நகரில் நடக்கும் பயிற்சி வகுப்பை, உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் உமா மகேஸ்வரி, இன்று துவக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி