டி.இ.டி., தேர்வை எதிர்கொள்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2013

டி.இ.டி., தேர்வை எதிர்கொள்வது எப்படி?

ஆகஸ்டில் நடக்க உள்ள, டி.இ.டி., தேர்வை, எளிதில் தேர்வர்கள் எதிர்கொள்ளும் வகையில், "தினமலர்" நாளிதழ் பயிற்சி முகாம், நாளை (28ம் தேதி) சென்னை, தி.நகரில் நடத்த உள்ளது.அரசு, தனியார் பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது, அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம், இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆகஸ்டில் நடக்கிறது.இத்தேர்வுக்கு, 6.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, வழிகாட்டும் வகையில், "தினமலர்" நாளிதழ், டி.இ.டி., இலவச பயிற்சி முகாமை நடக்கிறது.ஆசிரியர் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்வது எப்படி, கடந்தாண்டு டி.இ.டி., தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் விவரங்கள், தேர்வை எழுதும் நுணுக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் பயிற்சி முகாமில் வழங்கப்பட உள்ளன.நிகழ்ச்சியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி, அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி உதவியாளர் கணேசன், மதுரை வேலம்மாள் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் உள்ளிட்ட வல்லுனர்கள், டி.இ.டி., தேர்வை எளிதில் எதிர் கொள்வது குறித்து, ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.சென்னை, தி.நகர், பி.டி.தியாகராய ஹாலில் நடக்க உள்ள பயிற்சி முகாம், காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்க உள்ளது; அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு, டி.இ.டி., கடந்தாண்டு வினா தாள் நகல் அடங்கிய, எட்டு பக்க புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி