முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, "கீ-ஆன்சர்", டி.ஆர்.பி., இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம்.காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும், 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், "ஸ்கேன்" செய்து முடித்த நிலையில், கேள்விகளுக்கான உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), http://www.kalvisaithi.blogspot.in/2013/07/direct-recruitment-of-post-graduate.html?m=1 என்ற, இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டது.தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். இந்த கோரிக்கைகள் குறித்து, பாட வாரியாக நிபுணர் குழு ஆய்வு செய்து முடிவெடுத்த பின், இறுதி விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி