ஆசிரியப் பேரினமே!!! மீண்டும் நமக்கு வேதனையே மிச்சம் ....! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2013

ஆசிரியப் பேரினமே!!! மீண்டும் நமக்கு வேதனையே மிச்சம் ....!

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு 22.07.2013 தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணைகளில் மிகவும் எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தரஊதியம் வழங்கப்படவில்லை.மறுபடியும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைந்திட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது. 25.09.2013 முதல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் பெரும்எண்ணக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.ஏனெனில் போராட்டம் கடுமையாக இல்லாவிட்டால், இத்தகைய புறக்கணிப்புகள் தொடரத்தான் செய்யும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்......

ஆகவே ஆசிரியப் பேரினமே!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!

கோரிக்கைகள்:
1. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றுதல்
2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை அடியோடு இரத்து செய்தல்
3. அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் வரலாறு மற்றும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்தல்
4. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல்
உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25முதல் மாநிலத் தலைநகர் சென்னையில் மாபெரும் மறியல் அறப்போர் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம்.

இன்றிலிருந்தே தயாராவோம்!
சிறைச்சாலைகளை நிரப்பிடுவோம்!
அடிப்படை வாழ்வாதார உரிமைகளை வென்றெடுப்போம்!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி