இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2013

இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊதியக் குழு முரண்பாட்டைக் களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏராளமான ஊதிய முரண்பாடுகள் இருந்தது. இதனைக் களைய அரசு மூவர் குழுவை அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஸ்ரீவில்லிபுத்தூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வைரமுத்து, மாவட்டச் செயலாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரச் செயலாளர் ஆர்.கண்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், சிவகாசி வட்டாரச் செயலாளர் பி.கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி