EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013-க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2013

EMISன் கீழ் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் தகவல் தொகுப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்படாத பள்ளிகள் பதிவு செய்யவும் / விவரங்களை சரிப்பார்த்து 31.07.2013-க்குள் முடிக்க உத்தரவு - பதிவுகள் உள்ளீடு செய்ய இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

EMIS எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் மாணவர்களின் விவரங்களை Web - Portalல் பதிவு செய்ய தயாராக வைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ளீடு செய்யப்படாமல் உள்ள மாணவர்களின் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பெருவாரியான பள்ளிகளில் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள போதிலும் 2012-13ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் வகுப்பு வாரியான விவரத்துடன் ஒப்பிட்டு இணையதளத்தில் உள்ள பதிவுகளோடு ஒவ்வொரு தலைமையாசிரியரும் சரிபார்த்து உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியினை 31.07.2013க்குள் முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி