மத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20ஆயிரம் ஆசியர்கள் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2013

மத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20ஆயிரம் ஆசியர்கள் கைது.

மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதி யம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் சாலை மறியல் போரட்டம் நடத்தி னர்.இப்போராட்டங்களில்
20 ஆயிரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள்கைது செய்யப்பட்டனர்.புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி. பாலச்சந்தர் தலைமை வகித்தார். இந்த மறியலில் 360 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத் தில், செங்கற்பட்டு அம் பேத்கர் சிலை அருகே நடந்த மறியல் போராட்டத் தில் மாநிலத் தலைவர் கண்ணன் உட்பட 400 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்த னர்.ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் போரா ட்டத்தில் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் மோசஸ் தலைமையில் மறியல் நடைபெற்றது.இதேபோல், திருவள்ளுர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சை, நாகை, நெல்லை, குமரி, சிவகங்கை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக் குடி, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், விருதுநகர், தேனி உளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களி லும் மாநில, மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் தலைமையில் மறியல் நடை பெற்ற மறியலில்20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆசிரியர் களை காவல்துறையினர் கைது செய்தனர்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி மத்திய அரசு ஆசியர்க ளுக்கு இணையான ஊதி யம் தமிழ் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்க ளுக்கும் வழங்கப்படும் என்று இன்றைய முதல மைச்சர் அறிவித்தார். ஆனால், இதுவரை நிறை வேற்றவில்லை. ஆகவே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகை யில் இந்த மறியல் போராட் டத்தை ஆசிரியர்கள் நடத் தினர்.

4 comments:

  1. vangra sambalam pathadha

    ReplyDelete
    Replies
    1. palaya asiriyarkal pathikkavillai. 2009ku piraku serntha teacher differ from 10000. ok

      Delete
    2. palaya asiriyarkal pathikkavillai. 2009ku piraku serntha teacher differ from 10000. ok

      Delete
  2. Kalanthukonda teachers ku thanks namathu urimaiyai ketpom amma manathu vaithal vetri than meendum nandri

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி