எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு.

எம்.எட்., தேர்வு முடிவு, நாளை (26ம் தேதி), ஆசிரியர்கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பல்கலையின் இணைப்பு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களில், எம்.எட்., தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, நாளை(26ம் தேதி),www.tnteu.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.தேர்வு முடிவு குறித்த தொகுப்பு பட்டியல், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றிதழ், செப்., 2ம் தேதிக்குப் பின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெறவும், உரிய விண்ணப்பங்களில், செப்., 5ம் தேதிக்குள், "தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை - 5" என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி