குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2013

குரூப்-4: செப்., 4, 5 தேதிகளில் கலந்தாய்வு.

குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்.,4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. தேர்வாணையத்தின் அறிவிப்பு: கடந்த, 2012ல் நடந்த குரூப்-4தேர்வு மூலம், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இன்னும், 516 காலிப் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. நான்காவது கட்ட கலந்தாய்வு மூலம், இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.செப்., 4, 5 தேதிகளில்,
தேர்வாணைய அலுவலகத்தில், காலை, 8:30 மணி முதல் கலந்தாய்வு நடக்கும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், எந்த தேதியில் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள், தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட இரண்டு, "செட்' ஜெராக்ஸ் பிரதிகள் ஆகியவற்றை, கலந்தாய்வுக்கு வரும் போது, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி