குரூப்-4 தேர்வு: 5,500 அரசுப் பணிக்கு 14 லட்சம் பேர்போட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

குரூப்-4 தேர்வு: 5,500 அரசுப் பணிக்கு 14 லட்சம் பேர்போட்டி.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, இன்று, குரூப்-4 தேர்வு நடக்கிறது. 14 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வு என்பதால், டி.என்.பி.எஸ்.சி., விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.இளநிலை உதவியாளர், 3,531 பேர்; வரி தண்டலர், 19; தட்டச்சர், 1,738; சுருக்கெழுத்து தட்டச்சர், 242; நில அளவர், 6; வரைவாளர், 30 என, 5,566 காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கிறது.இதற்காக, 244 மையங்களில், 4,755 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், 17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், மூன்று லட்சம்பேரின் இதற்காக, 244 மையங்களில், 4,755 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.10ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், 17 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். எனினும், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தது, தேர்வுக் கட்டணம் செலுத்தாதது போன்ற காரணங்களால், மூன்று லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 14 லட்சம் பேர், இன்று, தேர்வை எழுதுகின்றனர்.950 பறக்கும் படைகள், 4,500 ஆய்வு அலுவலர்கள், 70,230 கண்காணிப்பாளர்கள், 4,755 முதன்மை கண்காணிப்பாளர்கள் என, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வில், எவ்வித முறைகேடுகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, டி.என்.பி. எஸ்.சி., விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இதற்காக, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர்களுடனும், எஸ்.பி.,க் களுடனும், பலமுறை ஆலோசனை நடத்தினார். தேர்வு மையத்திற்குள், மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லக்கூடாது; மீறினால், சம்பந்தப்பட்ட தேர்வர்களின், இன்றைய தேர்வு ரத்து செய்வதுடன், தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்கவும் தடை செய்யப்படும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொதுத் தமிழ் பகுதியில், 100 கேள்விகளும், பொது அறிவு பகுதியில், 100 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா, ஒன்றரை மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. இதில், இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த தேர்வு நடக்கிறது. முதலில், தமிழ்ப் பகுதிக்கான கேள்விகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம், சட்டசபை வரை வெடித்தது.தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, பல அரசியல் தலைவர்கள்,"தமிழுக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது&' என, வலியுறுத்தினர். இதன் காரணமாக, மீண்டும், தமிழ்ப் பகுதிக்கு, 100 கேள்விகள் என்ற, பழைய நிலை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வை, 14 லட்சம் பேர் எழுதுவதால், தேர்வு முடிவு வெளியாக, சற்று கால தாமதம் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பரிலோ, தேர்வு முடிவு வெளியாகும்என, கூறப்படுகிறது. தேர்வுக்கான, "கீ-ஆன்சர்&' மட்டும், இன்றுமாலையோ அல்லது திங்கட்கிழமையோ, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி