கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2013

கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டில்லி, கேந்திரிய சைனிக் போர்டு மூலம் ராணுவ அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:"டில்லி, கேந்திரிய சைனிக் போர்டு மூலம் ராணுவ அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து, ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மேல்நிலை கல்விக்கும், இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிக் கல்விக்கும் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இக்கல்வி உதவித்தொகை பெற மாற்றியமைக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பெறப்பட்டு உள்ளது.எனவே, இதற்கு விண்ணப்பம் சமர்பிக்க, நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் விதவையர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் கல்வி நிறுவனத்திலிருந்து, மாணவ, மாணவியரின் பிறந்தநாள் விவரத்துடன் உள்ள "போனபைடு" சான்று, மதிப்பெண் பட்டியல், தங்களது வங்கி கணக்கு புத்தகம் மற்றும் படை விலகல் சான்றின் நகல் ஆகியவற்றுடன், நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் செப்.,16ம் தேதிக்கு முன்னதாக சமர்பிக்க வேண்டும்.ஏற்கனவே, விண்ணப்பித்துள்ளவர்கள் வங்கிக் கணக்கு புத்தக நகல் சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப் பங்கள் பரிந்துரை செய்யப்படமாட்டாது." இவ்வாறு சந்திரசேகர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி