பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு.

பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வுஎழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை, பள்ளிக்கு வரவழைத்து, பெயர் பட்டியல்கள் தயாரிப்பதற்காக, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவர் பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, ஜாதி, ரேஷன் கார்டு எண், ஆதார்அடையாள அட்டை எண் உட்பட, 11 விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் தவறு ஏற்படாமல் இருக்க, மாணவரின்தந்தை, வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரின் கையெழுத்துடன், இந்தாண்டு புதியதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரையும், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி