சம்பளம் வருமா...வராதா...: கலங்கும் கவுரவ விரிவுரையாளர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

சம்பளம் வருமா...வராதா...: கலங்கும் கவுரவ விரிவுரையாளர்கள்.

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம், 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல், கண் கலங்கிநிற்கின்றனர்.தமிழகத்தில், 62 அரசு கல்லூரி களில், ஆயிரக்கணக்கான மாணவர் படிக்கின்றனர். உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, மாலை நேர வகுப்புகளை, 2006ல், அரசு அறிமுகப்படுத்தியது. காலை நேர வகுப்பில், 700 கவுரவ விரிவுரையாளர்கள்; மாலை நேர வகுப்பில், 1,661 கவுரவ விரிவுரையாளர்களை, 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் அரசு நியமித்தது.ஆசிரியர்களின் ஓராண்டு கால போராட்டத்திற்கு பின், இச்சம்பளத்தை,10 ஆயிரம் ரூபாயாக, அரசு உயர்த்தி வழங்கியது. ஜூன் மாதம் முதல், ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களின் பணிக் காலம். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், பணி நீடிப்பு ஆணையை அரசு வழங்கி வந்தது. ஆனால், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்படும் சம்பளம், நிலையற்ற வேலை ஆகிய காரணங்களால், கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.கல்லூரிகளில் பணிபுரிய ஒவ்வொரு ஆண்டும் பணி நீடிப்பு ஆணையை அரசுவழங்கி வருகின்றன. இந்த ஆணையை, மூன்று மாதங்களுக்கு அரசு தாமதப்படுத்துவதால், கவுரவ விரிரையாளர்கள், கல்லூரியில் சேர முடியாத நிலையில் தவிக்கின்றனர். மேலும், கவுரவ விரிவுரையாளர்கள், சம்பளம், மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டு, ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம், இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜூன், ஜூலை மாத சம்பளமும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், அரசு வழங்கும் சம்பளத்தையும் சரியாக வழங்காததால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து, தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் கூறியதாவது: அரசு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களுக்கு 21,600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் எனபல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ளது.ஆனால், கடந்த, மூன்று ஆண்டுகளாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, ஆசிரியர் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள சம்பளத்தை அரசுவழங்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை, அரசு உடனடியாக வழங்க வேண்டும்.கவுரவ விரிவுரையாளர்களுக்கான பணி நீடிப்பு ஆணையும், அரசு இன்று வரை வழங்கவில்லை. வாய்மொழி உத்தரவின் பேரில் பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே, பணி நீடிப்பு ஆணையையும் அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி