டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி.

டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார். இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று,தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவிவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடிகும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும். முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்' செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண்மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம்.விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.

6 comments:

  1. yennada colour coloura reel viduringa pillaum killivittu thotilum atringala yezhaigal ilichavaigal

    ReplyDelete
  2. dharmapurila confirma qution vangirukanga

    ReplyDelete
  3. nithyanandha pola sattapadi yendha thavarum seiyavillai

    ReplyDelete
  4. Answer key podamale answer sheet a scan panna arampichuntingala.enna koduma sir ethu .ithuvum eyewashthana.........

    ReplyDelete
  5. Police tharapula 120 answers vathurukkuna sonnanga.ithu poli question.ana onnu theriyuthu ithuvum kan thudaipputhan

    ReplyDelete
  6. TET=talenter eleminate test only for richer no poorku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி