மேல்நிலைப் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று ஆரம்பமானது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2013

மேல்நிலைப் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று ஆரம்பமானது.

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அனைத்து முதுகலை ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று ஆரம்பமானது. நேற்று ஆங்கிலம், வணிகவியல் பாடங்களுக்கான பயிற்சி ஆரம்பமானது.நெல்லை மாவட்டத்தில் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளியில் நடந்தபயிற்சியை முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் கவின் தொடங்கி வைத்தார். சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரிய பயிற்றுனர்களான பேட்டை ராணி அண்ணா கல்லூரி ஆங்கில துறை பேராசிரியை விஜிலா, மங்கையர்கரசி, விரிவுரையாளர் சாந்தி, முதுகலை ஆசிரியர்கள் மாதவன், ஜீவா, எஸ்தர் ராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.வணிகவியல் பாடத்திற்கு பயிற்றுனர்கள் செந்தில்குமார், சாகுல் அமீது, மேபல் லதாராம், உதவி பேராசிரியை டார்லின் செல்வி பயிற்சி அளித்தனர்.இப்பயிற்சி இன்றும் (27ம் தேதி) தொடர்கிறது. 29 மற்றும் 30ம் தேதிகளில் கணிதம், செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் இயற்பியல், 6 மற்றும் 7ம் தேதிகளில் வேதியியல், 10 மற்றும் 11ம் தேதிகளில் தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாட்ஙகள் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி